உங்கள் சுவையான தென்னிந்திய உணவு வகைகளை உடனடியாக சுவையுங்கள்!..
தென்னிந்தியாவில் சமைக்கும் உணவுகளுக்கு என்று ஒரு தனி புகழ் உள்ளது. வேற்றுநாட்டு மக்களாக இருந்தாலும் நம்முடைய தென்னிந்திய உணவுகளை விரும்பி சாப்பிடுவதில் அதிக நாட்டம் கொள்கிறார்கள். அதிலும் நம்முடைய பாரம்பரிய உணவுகளின் சுவைக்கு இணையான வேறு ஏதேனும் ஒரு உணவு உண்டோ!…தொன்று தொட்டு பாரம்பரியத்தை காத்துவரும் நம்முடைய வீட்டில் வாரத்தில் ஒரு முறையாவது சமைக்க படும் உணவு எது என்று கேட்டால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும் நண்பர்களே !… இட்லி மற்றும் தோசை என்று கூறினால் அது உண்மையில் மிகவும் சரியான விடைதான். வாருங்கள் நண்பர்களே!… நம்முடைய தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் இருக்கும் சுவையான உணவுகளை பார்க்கலாம்.
சுட சுட இட்லி மற்றும் மொறு மொறு தோசை
அரிசி மற்றும் உளுந்துடன் அரைத்து செய்யப்படும் மாவில் ஆவியாகும் முறையில் செய்யப்படும் ஒரு வகை உணவு தான் இந்த ஆவிபரக்கும் இட்லி. மற்றும் அந்த அரிசி மாவுடன் சிறிது வெந்தயத்தை சேர்த்து மாவு அரைத்து செய்தால் சுவையான மற்றும் மொறு மொறு தோசை தயாராகிவிடும். இதனுடன் சாம்பார் அல்லது சட்னி வைத்து சாப்பிட்டால் அதில் இருக்கும் ருசியே தனி தான். வீட்டில் மாவு அரைக்க நேரம் இல்லாமல் இருக்கும் நபர்களுக்கு ஏற்ப Idly Dosa Mavu near me madurai-ல் கிடைக்கிறது.
உப்பலான பூரி
பூரி என்று கூறியவுடன் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் கூட வாயில் எச்சில் சுரக்கும். அப்படி சுவையான பூரியை நாம் தயாரிக்க கோதுமை மாவு பயன்படுத்தலாம் அல்லது மைதா மாவு பயன்படுத்தினால் நம்முடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் சுவையான மற்றும் உப்பலான பூரியை தயாரிக்கலாம். மேலும் உங்களுடைய குழந்தைகள் மாவு இல்லாத பொழுது இந்த உப்பலான பூரியை சமைத்து கொடுங்கள் என்று கேட்கிறார்களா !… கவலை வேண்டாம் நண்பர்களே !… Subiksha Foods தயாரிப்புகளில் ஒன்றான Instant Poori Madurai-ல் கிடைக்கிறது . இதை வாங்கி உங்களுடைய சமையல் அறையில் வைத்து கொண்டால் உங்களுக்கு தேவையான நேரத்தில் உப்பலான பூரியை சமைத்து சாப்பிடலாம்.
மெதுவான சப்பாத்தி
சாப்பிடும் பொழுது மெதுவாகவும் சுவையாகவும் இருக்கும் சப்பாத்தியை அதிக சத்துக்கள் நிறைத்த தானியவகைகளில் ஒன்றான கோதுமை மூலம் தயாரிக்க படுகிறது. இந்த சப்பாத்தி நாம் தினசரி உண்பதால் நம்முடைய உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் உடலின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும் வயதானவர்களுக்கு சாப்பிடும் வகையில் மெதுவாக இருப்பதால் அவர்களுக்கு தேவையான நேரத்தில் சமைத்து சாப்பிட Instant Chapati Madurai-ல் வாங்கி அவர்கள் தினசரி சாப்பிடலாம்.
ருசியான பரோட்டா
இன்று அனைத்து ஹோட்டலிலும் இரவு உணவாக இருப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் பரோட்டா அனைத்து வயதினருக்கும் பிடித்த சுவையான உணவாக இருக்கிறது. ஹோட்டலில் தயாரிக்கப்படும் அதே பாணியில் வீட்டிலும் தயாரிக்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா ? ஆம் நண்பர்களே !… சில சமயங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டு விடுகின்றன இதனால் நமக்கு பிடித்த சுவையான பரோட்டாவை சமைத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போய்விடும். அதனால் உங்களுக்கு தேவையான நேரத்தில் பரோட்டா சமைத்து சாப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் Instant Paratha Madurai-ல் வாங்கி கொள்ளுங்கள்.
மிருதுவான கோதுமை மாவு பரோட்டா
பரோட்டா என்பது மைதா மாவில் தயாரிக்க பட்டாலும் கோதுமை மாவில் தயாரிக்க படும் பரோட்டாவுக்கு என்றும் ஒரு தனி ருசி உள்ளது. இந்த கோதுமை பரோட்டா மைதா மாவு உபயோகித்த உணவுகளை உட்கொள்ள முடியாத நபர்களுக்கு சாப்பிடும் பொழுது ஒரு வித மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை நீங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தில் வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இனி பரோட்டா சாப்பிட முடியாது என்ற கவலைவேண்டாம்.இனி நீங்களும் சாப்பிடலாம் சுவையான பரோட்டா.
தமிழ்நாட்டில் சமைக்கப்படும் உணவுகள் ஒரு தனி பாணியில் இருக்கும். இதில் உங்களுக்கு பிடித்த சுவையான உணவுகளை செய்து சாப்பிடுங்கள். பாரம்பரிய உணவுகள் தான் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் அதிக ருசியானதாகவும் இருக்கிறது. இனி உங்களுக்கு பிடித்த உணவுகளை உங்களுடைய வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.
வலைதளம் : www.subikshafoods.in
தொடர்புக்கு : +91 80567 44906