ஆரோக்கியமான உணவு மட்டுமே நம் உடலிற்கு சிறந்த முதலீடு!!!
தென்னிந்தியா எப்பொழுதும் விருந்தினர்களை உபசரிப்பதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் அவர்கள் வந்த உடன் அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதில் இருந்து பிறகு உணவு கொடுத்து அவர்கள் செல்லும் வரை கவனித்து கொள்வதில் அவர்களை விட மிகுந்தவர் எவரும் இல்லை. அப்படி மற்றவர்களை நல்ல முறையில் உபசரிக்க சிறந்த ஆரோக்கியமான உணவு இட்லி ஆகும். மல்லிகை பூ போல் மெதுவான சுட சுட இட்லியை சாம்பார் உடன் வைத்தவுடன் அவர்கள் முகத்தில் வரும் சந்தோசத்திக்கு ஈடு வேறு எதுவும் இல்லை. அந்த இட்லியை நம் ஊரில் சாம்பார் மற்றும் பல வகையான சட்னி உடன் சாப்பிடும் பொழுது உணர்வோம் இதை விட ஒரு நல்ல உணவு வேரு எதுவுமே இல்லை என்று!!! இன்று இட்லி மற்றும் தோசை மாவு வீட்டில் தயாரிக்க வேண்டிய அவசியமும் இல்லை, நமக்கு தேவைப்படும் பொழுது Idly Dosa Mavu near me madurai–ல் வாங்கிக் கொள்ளலாம்.
இட்லி கி.பி.800–1200 இடைப்பட்ட நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. நம் ஊரில் இட்லி எவ்வளவு புகழ் பெற்றது என்றால் அதற்கு தனியாக ஒரு தினமே கொண்டாடுகிறார்கள். ஆம், 2015 வருடத்தில் இருந்து மார்ச் மாதம் 30 ஆம் தேதி “உலக இட்லி தினம்” பெரும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நம் இட்லியானது உலக அளவில் மிகவும் சிறப்பான ஒரு காலை உணவாக கருதப்படுகிறது. ஏனென்றால் தற்போழுது வந்த அறிக்கையின்படி, விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு பேக் செய்யக்கூடிய சட்னி பொடி மற்றும் சாம்பார் பொடியுடன் கூடிய ‘ஸ்பேஸ் இட்லிஸ்’ என்ற சிறப்பு இட்லியை உருவாக்கி உள்ளதாக பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம்(DFRL), மைசூர் தெரிவித்துள்ளது. மேலும் பல வகையான இட்லியை நம் வீட்டில் அதிக அளவில் செய்யப்படுகிறது.
இட்லியின் வகைகள் :
பெரும்பாலும் அரிசி இட்லி, ரவை இட்லி, சில்லி இட்லி, வறுத்த இட்லி, பாசி பருப்பு இட்லி, கேழ்வரகு இட்லி மற்றும் மேலும் நிறைய விதமான தானியங்கள் வைத்தும் நாம் இட்லி செய்து சாப்பிடுகிறோம். இதில் அரிசி இட்லி நாம் தினசரி உண்ணும் வகை ஆகும். ஆனால் ரவை ,கேழ்வரகு இட்லி மற்றும் தானிய இட்லியை நாம் மிகவும் அரிதாக தான் பயன்படுத்துகிறோம். முக்கியமாக சர்க்கரை நோயால் அவதிப்படுவோர் மிகுந்த தானியங்கள் நிறைந்த இட்லியை பயன்படுத்துவது அவர்களது உடலிற்கு நன்மை தரும். பொதுவாக சில்லி இட்லி மற்றும் வறுத்த இட்லியை சிறிய குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதேபோல் நமக்கு தேவைப்படும் நேரத்தில் உடனடியாக செய்யும் Instant Idly–யும் ஒருவகை தான் .
இட்லியின் பயன்கள்:
இட்லி நம் உடம்பிற்கு அதிக அளவில் பயனை கொடுக்கிறது. முக்கியமாக உடல் எடை குறைப்பது , ஆரோக்கியமாக நம் உடம்பை பேணுவது போன்ற பலவகையான நன்மையை நமக்கு தருகிறது.
1.உடல் எடையில் குறைப்பில் முக்கிய பங்கு :
*நாம் எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும் அதற்கான தகுந்த உணவு முறை இல்லை என்றால் நம் எடை குறையாது. ஆகவே எடை குறைப்பு உணவு முறையில் முக்கிய பங்கு வகிப்பது இட்லி ஆகும். எனவே சரியான அளவில் இட்லி எடுத்து கொள்ள வேண்டும். நாம் உண்ணும் 1 இட்லியில் சராசரியாக 33 கலோரியை கொண்டுள்ளது. அதில் கார்போஹைட்ரெட் , இரும்பு மற்றும் புரத சத்துகளும் இடம் பெற்றிருக்கும். இதன்படி உண்டால் எளிதில் உங்கள் உடல் எடையை குறைக்கலாம்.
2.ஆரோக்கியதில் முக்கிய பங்கு:
* நாம் தோராயமாக சுமார் 4 இட்லி உட்கொண்டாலே நிறைவாக இருக்கும் மற்றும் அன்றைக்கு தேவையான ஆற்றலை அளிக்கும் திறன் கொண்டது. அது மட்டுமில்லாமல் எளிதில் ஜீரணிக்கும் வகையில் உள்ளது. எனவே நாம் நம்மை லேசாக உணரலாம்.
* நாம் எண்ணெய் நிறைந்த உணவை எடுத்து கொள்ளும் பொழுது அதன் விளைவாக நம் முகத்தில் அதிக எண்ணெய் சுரந்து பருக்கள் ஏற்படும். ஆகையால் முடிந்த வரை எண்ணெய் இல்லாத உணவாகிய இட்லியை போன்ற சத்தான உணவை எடுத்து கொள்ள வேண்டும்.
*பொதுவாக வேகவைத்த உணவின் மூலம் கிருமிகளை எளிதில் நீக்கலாம். தற்பொழுது பரவி வரும் “கொரோனா வைரஸ்(கோவிட் 19)” இருந்து தப்பிக்கவும் நாம் கண்டிப்பான முறையில் வேகவைத்த உணவு எடுத்து கொள்ள வேண்டும். இதன் மூலம் கொடிய நோயில் இருந்து விடுபடலாம்.
*இட்லியை உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு ஏதுவாக அதிக சுவையுடன் கூடிய சில்லி மற்றும் வறுத்த இட்லி அவர்களை கண்டிப்பாக சாப்பிட தூண்டும் வகையில் உள்ளது.எனவே இட்லியானது அனைத்து மக்களையும் உண்ண தூண்டும் ஒரு முக்கிய உணவு.
*எப்பொழுதும் தானியங்கள் நிறைந்த உணவு நம் உடலிற்கு மிகுந்த சத்துக்களை தந்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு ஆயுதம். அதன்படி தானிய இட்லி மூலம் அதிக அளவிலான நார்சத்து மற்றும் இரும்பு சத்தை பெறுவோம்.
ஆரோக்கியமான உணவு மட்டுமே நம் உடலிற்கு சிறந்த முதலீடு. எனவே இட்லி போன்ற சிறந்த உணவை எடுத்து கொண்டு மிகவும் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோமாக!!!! நீங்கள் Idly Dosa Mavu near me madurai-ல் வாங்க வேண்டும் என்றால் , ரேஷ்மா டிபார்ட்மெண்டல், திருநகர் 4வது நிறுத்தம், திருநகர் என்பதற்குச் செல்லவும்.
வலைதளம் : www.subikshafoods.in
தொடர்புக்கு : +91 80567 44906